Also Watch
Read this
By: Manigandan Raja

தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள அயதுல்லா கமேனியின் உடல் :
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் உடலுக்கு இந்திய மதத் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 10க்கும் மேற்பட்டோர் கமேனியின் உடலுக்கு முன் சுமார் ஒரு நிமிடம் வரை நின்று அஞ்சலி செலுத்தினர்.
தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஊர்வலம் தொடங்கி வரும் 9ஆம் தேதி மஷாத்தில் கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் :

(Courtesy: Reuters)
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பேரிடரால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், சுமார் 15 ஆயிரம் பேர் தங்கள் உடமைகள், வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு ஹவுதி அமைப்பு எச்சரிக்கை :
ஏமன் நாட்டில் ஒரு ஈரானிய பயணிகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில் அதை சவூதி அரேபியா போர் விமானங்களை கொண்டு தடுக்க முயன்றதாக ஹவுதி அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
சவூதி அரேபியா தொடர்ந்து தங்களது வான்வெளியில் அத்துமீறி செயல்பட்டால், அந்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சொத்துக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஹவுதி அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.