Also Watch
Read this
By: Manigandan Raja

ரேணுகாசுவாமி கொலை வழக்கில் சாட்சிக்கு கொலை மிரட்டல் :
பெங்களூரு ரேணுகாசுவாமி கொலை வழக்கில், நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க வேண்டாம் என மிரட்டியதாக மூன்று பேரை காமாட்சிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், ஐந்து பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் 49-வது சாட்சியான சந்தீப்புக்கு, நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் சாட்சி அளிக்க வேண்டாம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தீப் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கியதுடன், மிரட்டலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதுதொடர்பாக காமாட்சிபாளையம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வேணு, சுஹாஸ் மற்றும் புனித் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் புனித், 'D Company' என்ற ரசிகர் பக்கத்தை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. சுஹாஸ் மற்றும் வேணு, துமகூருவைச் சேர்ந்த தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், சுஹாஸ், சந்தீப்பை பேச வேண்டுமென கூறி அழைத்து, காரில் அழைத்துச் சென்று சாட்சி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு சந்தீப் மறுப்பு தெரிவித்ததால், அவரை சுஹாஸ் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் காமாட்சிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.