Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்யாவை சேர்ந்த நிகோலா - வன்யா பீர்க்ஸ் ஜோடி கைது :
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரேடியோ டவர் மீது ஏறி Propose செய்த ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலா - வன்யா பீர்க்ஸ் என்ற காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்தனர். சுமார் ஆயிரத்து 454 அடி உயரம் கொண்ட டவரின் மீது எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி Propose செய்த ஜோடியின் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.
போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு-அமெரிக்கா :

நேட்டோ((NATO)) அமைப்பு நாடுகளின் ஒற்றுமையை சோதிப்பதற்காக முக்கிய உறுப்பு நாடான போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலந்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் மூலம் குறி வைக்கப்படலாம் எனவும் அமெரிக்கா கணித்துள்ளது.