Also Watch
Read this
By: Manigandan Raja

ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜூலியன் நாகெல்ஸ்மான் :
FIFA கால்பந்து உலக கோப்பை தொடரில் இருந்து ஜெர்மனி வெளியேறியதால் அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜூலியன் நாகெல்ஸ்மான் விலகினார்.
4 முறை FIFA கால்பந்து உலக கோப்பை வென்ற ஜெர்மனி ROUND OF 32 சுற்றில் பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்து வெளியேறியதால் தனது பயிற்சியாளர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார்,
அமெரிக்க வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசஸ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.