Also Watch
Read this
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு திருமாவளவன் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் கவனிக்க வைத்துள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள் கூட்டத்தில்...
சேலம் மாவட்டம், ஓமலூரில் விசிகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று, திருமாவளவன் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று, விசிகவினர் தீர்மானத்தை நிறைவேறியது உற்று நோக்க வைத்துள்ளது.

ஓமலூரில் விசிக கூட்டம்
சேலம் மாவட்டம், ஓமலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில், நடைபெறவிருக்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும், அவர் வெற்றி பெற்று தவெக அரசில், துணை முதல்வர் ஆக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.