news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆளுநரை சந்தித்து புகார் அளித்த நயினார் நாகேந்திரன்
tv

Also Watch

tv

Read this

ஆளுநரை சந்தித்து புகார் அளித்த நயினார் நாகேந்திரன்

பாஜக தரப்பில் புகார் மனு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து புகாரளிக்க, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.

பலமுனை தாக்குதல்கள்
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களிலேயே தவெக அரசு பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவது குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுநரிடம் முறையிடப்பட்டு உள்ளது. மேலும், வைகை ஆற்றை மீட்பது தொடர்பாக ஆளுநர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆளுநரிடம் புகார்
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெண் குழந்தைகளிடம் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் நடந்துகொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி பங்கேற்றது குறித்தும் ஆளுநரிடம் புகாரளித்துள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சருக்கு அதிகாரம் இல்லை
மேலும், 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அளவுக்கு குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், ஆளுநரின் ஆய்வு அதிகாரத்தை கட்டுப்படுத்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிகாரம் இல்லை என்றும் சாடினார்.

Related Link
திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம்

திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரல்

0
4 mins agoshare
புற்றுநோய் மருந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau