news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மதுரையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கோவை கிங்ஸ்
tv

Also Watch

மதுரையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கோவை கிங்ஸ்

சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNPL

84 ரன்கள் வித்யாசத்தில் கோவை அணி வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 10-வது டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மதுரையை வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கோவை, 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய மதுரை அணி, எதிரணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் 14.2 ஓவருக்கு 98 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன்கள் வித்யாசத்தில் கோவை அணி வெற்றிப்பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிப்பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்திருந்ததால், பாகிஸ்தான் 180 ரன்கள் பின்தங்கியது.

நமீபியா, தெ.ஆ, ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் நமீபியா அபார வெற்றி பெற்றது. நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நமீபியா , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா வெற்றிபெற்றது.

Related Link
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இந்திய அணி வரலாற்று சாதனை

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இந்திய அணி வரலாற்று சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனுவெல்லாம் வேணாம்... ஸ்பாட்லயே தீர்வு!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved