Also Watch
Read this
By: Manigandan Raja

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பிரிவு உபச்சார போட்டி-மெஸ்ஸி
அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, சில மாதம் அணிக்காக விளையாடப்போவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பிரிவு உபச்சார போட்டியில் விளையாட விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்தியாவில் விளையாடும் பிரேசில் கால்பந்து அணி

உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசில் தேசிய அணி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில் பிரேசில் அணி ஒரு சர்வதேச நட்பு போட்டியில் விளையாட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரேசில் அணிக்கு இந்திய ரசிகர்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவு, இந்தியாவில் போட்டி நடத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
காமன்வெல்த் - இந்தியாவுக்கு முதல் பதக்கம்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் பாரா பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஜண்டு குமார் வெண்கலம் வென்று அசத்தினார். 181 மற்றும் 190 கிலோ எடைப்பிரிவில் வென்ற ஜண்டு, 196 கிலோ எடைப்பிரிவில் தோல்வி அடைந்து 130.9 புள்ளிகளை பெற்றார். 132.8 புள்ளிகளுடன் நைஜீரியாவின் இட்ரிஸ்((IDRIS)) தங்கப் பதக்கம் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved