news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புகழாரம்
tv

Also Watch

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புகழாரம்

Mumbai indians

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள் 1

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டி :

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்டர் காஷி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் :

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மொனாக்கோவில் நடக்கும் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி நாட்டின் கரீன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த ஸ்வரேவ் சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புகழாரம் :

உலகின் எந்தவொரு ஆடுகளத்திலும், எந்தவொரு பந்துவீச்சாளரையும் வைபவ் சூர்யவன்சியால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என ஜஸ்ரித் பும்ரா கருத்து தெரிவித்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவரது பேட்டிங் திறமையை கண்டு வியந்ததாகவும், தமது பந்து வீச்சை துணிச்சலாக எதிர்கொண்டு அவர் ஆடியது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் பும்ரா கூறினார்.

சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸ் :

இடுப்பு வலி காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடாத சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸ், ஏப்ரல் 11-ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார்.

பிளேயிங் லெவனில் (Playing 11) மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெவால்ட் பிரெவிஸ் அணிக்கு திரும்புவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

Related Link
ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved