Also Watch
Read this
By: Manigandan Raja

"The Boom Effect" புத்தகம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது
இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றிய புதிய புத்தகம் "த பூம் எஃபெக்ட்" ((The Boom Effect)) அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. பும்ராவின் பலம், அவரது உடல் திறன், அவர் எப்படி பந்துவீசுகிறார் என்பதை ஆராய்ச்சி செய்து இந்த புத்தகம் உருவாகியுள்ளது.
பென்குவின் நிறுவனம் வெளியிடும் இந்த புத்தகத்தை ஊடகவியலாளர்கள் ஆயுஷ் புத்ரன், நிகோலஸ் ப்ரூக்ஸ் இணைந்து எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தில் அகமதாபாத் முதல் சர்வதேச அரங்கில் எப்படி பும்ரா உயர்ந்தார் என்பதை மையமாக வைத்து 3 பிரிவுகளாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்மித்தின் திடீர் அறிவிப்பில் ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் விளையாடுவது சந்தேகம் என கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனாமாக இருந்துவரும் இவர், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு தொடராக கவனம் செலுத்திவரும் நிலையில், இப்போதைக்கு ஆஷஸ் வெகு தூரத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கொரு வெற்றி, அங்கொரு வெற்றி என பல்வேறு ஆசைகள் உள்ளதாகவும், காலம் கனிந்து வருகிறாதா என பார்க்கலாம் எனவும், தற்போதைக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 45.1 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved