Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற கோரிக்கை
இந்தியாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி மறுப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு வர முடியாது எனவும், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டில் பொதுவான மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
போட்டிகள் அனைத்தும் வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் மொஹாலி மற்றும் ஜலந்தரில் நடைபெற உள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரில் இந்தியா சாதனை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் அதிரடி சேசிங் செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இந்தியா 13.4 ஓவர்களிலேயே முறியடித்து 2-வது இடத்தை பிடித்தது.

அதேபோல, 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை 14.5 ஓவர்களிலேயே எட்டி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடரை 2-க்கு 0 என கைப்பற்றிய இந்தியா, 3-வது போட்டியிலும் வென்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved