Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அபார ஆட்டம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், சபலென்காவுடன் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, எம்மா நவரோ, செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். அதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அல்காரஸுடன் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்சஸ் டியாபோ, அலெக்ஸ் மிச்செல்சன் ஆகியோர் தகுதி பெற்றனர்.
பந்தயத்தின்போது விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த கார்
சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, அடுத்தடுத்து கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, அந்த காரில் இருந்த வீரரை, மற்றொரு வீரர் காப்பாற்றிய நெகிழ்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

ஷாங்காய் நகரில் GT சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின்போது, சில கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த காரை ஓட்டிவந்த வீரர் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், மற்றொரு வீரர் தனது காரை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று காப்பாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved