Also Watch
Read this
By: Manigandan Raja

தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு ஜூடோ சங்கம் 2026–2029 காலகட்டத்திற்கான தேர்தலை இன்று சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்று முடிந்தது.சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளரான மாண்புமிகு நீதியரசர் கோவிந்தராஜன் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பிலான பார்வையாளர் லதா ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2026–2029 காலகட்டத்திற்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தலைவராக பார்த்த் ஜிண்டால், பொதுச் செயலாளராக முரளி, துணைத் தலைவராக நவீன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச் செயலாளராக மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்களாக மொஹித் சூரியா, பாலச்சந்தர், குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜீவிதா, ஷோபனா ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ஆண்ட்ரூ, ஃபோர்டி, அமீர் ஜாங்கோ, கீமோ பால், சீல்ஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முதல் போட்டி வரும் 27ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
நியூ. வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம்
விளம்பரப் படப்பிடிப்பின்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அக்டோபரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. முழுமையாக குணமடைய ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved