news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி
tv

Also Watch

tv

Read this

செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜோகோவிச்

பரபரப்பான ஆட்டத்தில் கனடாவின் பெலிக்ஸ்-ஐ வீழ்த்தினார் :

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் உடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார்.

முதல் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் 7க்கு6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார். இரண்டு மற்றும் நான்காம் சுற்றுகள் முறையே 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் பெலிக்ஸ் வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் பரபரப்பான 5ஆவது சுற்றில் 7க்கு 6 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

செக் குடியரசின் கரோலினா முசோவா வெற்றி :


விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில், செக் குடியரசின் கரோலினா முசோவா வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவாவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய முசோவா 7-க்கு 6, 6-க்கு 4 என வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் மோதுகின்றனர்.

உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்ட்யூக் வெற்றி :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்ட்யூக் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுடன் மோதிய அவர், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 6-க்கு 3, 6-க்கு 2 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-க்கு 3, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Link
டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் திடீர் நீக்கம் ஏன்?

டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் திடீர் நீக்கம் ஏன்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

0
0 min agoshare
பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau