news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் திடீர் நீக்கம் ஏன்?
tv

Also Watch

tv

Read this

டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் திடீர் நீக்கம் ஏன்?

சஞ்சு சாம்சன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கௌதம் கம்பீர்

அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கம் :

இந்திய டி20 அணியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் திடீரென நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். பிசிசிஐ மீட்டிங்கில் பேசிய அவர், சஞ்சு சாம்சனுக்கு தற்போது 31 வயதாவதாகவும், 2028-ல் டி20 உலகக் கோப்பை நடைபெறும்போது அவருக்கு 34 வயதாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு நிரந்தர ஓப்பனர்களாக விளையாடக் கூடிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களை தற்போதிருந்து வளர்த்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவுக்கு ஆதரவாக சிராஜ் உருக்கமாக பதிவு :

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில், ஒரு போட்டி எப்போதும் ஒரு வீரரின் மகத்துவத்தை தீர்மானிக்காது என ஜாம்பவான் ரொனால்டோவுக்கு ஆதரவாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கானோர் கனவு காண கற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்றும், தாங்கள் ஒரு வீரர் மட்டும் அல்ல..கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் அடையாளம் எனவும் சிராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ICC Cricket Hall of Fame பட்டியலில் இணையும் கங்குலி :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் பெயர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் ((ICC Cricket Hall of Fame)) பட்டியலில் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மகத்தான பங்களிப்பை அளிக்கும் வீரர்களுக்கு கௌரவம் வழங்கும் விதமாக, வீரர்களின் பெயர்கள் ICC Cricket Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முன்னாள் கேப்டன் தோனியின் பெயரும் சாதனை பட்டியலில் இணைக்கப்பட்டது. தற்போது பட்டியலில் 12ஆவது வீரராக கங்குலியும் இணைகிறார்.

Related Link
காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டி

காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி கால்பந்து போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விரைவில் விற்பனைக்கு வருகிறது Google Pixel 11

3
2 mins agoshare
விடைபெறுகிறது Yamaha R6








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau