இங்கிலாந்து அணியின் முன்னாள் ஒயிட் பால் கேப்டனும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற நட்சத்திர வீரருமான ஜோஸ் பட்லர் தொடை தசைநார் அறுவை சிகிச்சைக்கு பின்னர் முன்பை விட அதிக உத்வேகத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் செய்யும்போது ஜோஸ் பட்லருக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கண்ணீர் விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்திய அபிஷேக் போரல்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல், ரஞ்சி கோப்பை தொடரில் சதம் அடித்த பின் கண்ணீர் விட்டு தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் புகார் குறித்த கேள்விக்கு, கிரிக்கெட் மூலமாக மட்டுமே பதிலளிக்க விரும்புவதாகவும், வேறெதையும் சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார்.
பிரித்வி ஷா - ஆக்ரிதி அகர்வால் மீண்டும் இணைந்தனர்
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா ((Prithvi Shaw))மற்றும் நடிகையும் சமூக ஊடகப் பிரபலமுமான ஆக்ரிதி அகர்வால் (( Akriti Agarwal))ஆகியோர் தங்கள் நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்ட சில வாரங்களிலேயே மீண்டும் தங்கள் உறவைத் தொடங்கியுள்ளனர்.
நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்ள எடுத்த முடிவுக்குத் தானே பொறுப்பேற்பதாக ஆக்ரிதி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி செப்டம்பரில் திருமணத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.