Also Watch
Read this
By: Manigandan Raja

இங்கிலாந்து அணி :
டி20 உலகக்கோப்பை தொடரின் மும்பையில் நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை இங்கிலாந்து அணி போராடி வீழ்த்தியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. ஜக்கோப் மற்றும் ஹாரி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேபாள அணி, 20 ஓவர்கள் வரை விளையாடி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. திபேந்திரா 44 ரன்களும், ரோகித், லோகேஷ் தலா 39 ரன்களும் எடுத்தனர். வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved