Also Watch
Read this
By: Web Team

2025-26ஆம் ஆண்டுக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
AIFF நடத்தும் மற்ற போட்டிகள் குறித்தும் அட்டவணையில் இடம்பெற்று இருக்கும் நிலையில், இந்தியன் சூப்பர் லீக்((ISL)) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனால், இந்த வருடம் ISL தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ISL தொடர் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், எல்லா தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, IPL தொடரைப்போல் இந்தியாவின் முன்னணி லீக்காக((LEAGUE)) மாறியுள்ளது.
இந்த சூழலில், ISL லீக்கின் முதன்மை உரிமைகள் ஒப்பந்தமான MRA இந்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும் நிலையில், அது இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் :அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..