Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய அணிக்காக அறிமுகமான மிக இளம் வீரர் சாதனை :
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்கிற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இவர், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார்.
15 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சச்சின் சாதனையை முறியடித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. 1989-ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் சச்சின் அறிமுகமானார்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தல் :
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0க்கு 1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்துள்ளது.