Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச போட்டிகளில் 16 வயதுக்குள் 2 முறை அரைசதம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் தனித்துவமான சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இந்த தொடரில் 2 அரை சதங்களை அடித்துள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் 16 வயதுக்குள் 2 முறை அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்தின் மூலம் நடப்பாண்டில் இதுவரை 783 ரன்களை குவித்த அவர், 781 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த கோலியை பின்னுக்கு தள்ளினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved