news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விம்பிள்டன் டென்னிஸ் : செக் குடியரசின் கரோலினா முசோவா அபார வெற்றி
tv

Also Watch

tv

Read this

விம்பிள்டன் டென்னிஸ் : செக் குடியரசின் கரோலினா முசோவா அபார வெற்றி

கரோலினா முசோவா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரோலினா முசோவா

கோகோ காப்பை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் கரோலினா முசோவா ஆகியோர் மோதினர்.

முசோவா முதல் செட்டை 6-க்கு 2 என கைப்பற்ற, பதிலடியாக கோகோ காப் 2-வது செட்டை 6-க்கு 1 என கைப்பற்றினார். பிறகு, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிறப்பாக ஆடிய கரோலினா முசோவா 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்வரேவ் 6-க்கு 4, 6-க்கு 4, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதில், பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் ஸ்வரேவ் மோதுகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி :

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி, தொடரையும் 2-க்கு 0 என கைப்பற்றியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பென் கரண் 135 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம், 48.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Link
இப்படியொரு ஆட்டமா? யாருமே எதிர்பார்க்கவில்லை

இப்படியொரு ஆட்டமா? யாருமே எதிர்பார்க்கவில்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம்

0
5 mins agoshare
Train








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau