Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு
2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஐசிசி செய்துள்ள புதிய மாற்றத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. புதிதாக சூப்பர் சீரிஸ், ரவுண்டு 2, சூப்பர் 7 என மூன்று சுற்றுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த புதிய விதிகள் கிரிக்கெட் விளையாட்டை உலகமயமாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தடுக்கும் என இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஓய்வு அறிவிப்பின்போது முதலில் அழைத்தவர் சச்சின்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தபோது, ஜாம்பவான் சச்சின் தான் முதலில் தன்னிடம் பேசியதாக முன்னாள் வீரர் ரஹானே கூறினார். தான் நீண்ட காலம் விளையாடுவேன் என சச்சின் நினைத்ததாகவும் ரஹேனே கூறினார்.

அதேபோன்று விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புஜாரா ஆகியோர் ஓய்வு குறித்து கேட்டதாகவும், எந்தவித வருத்தமும் இன்றி ஓய்வு பெறுவதாக அவர்களிடம் தெரிவித்ததாகவும் ரஹானே கூறினார்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்
டிஎன்பிஎல் தொடரின் 11ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மகாதேவன் 60 ரன்களை எடுத்தார்.

196 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக முகமது 30 ரன்களை எடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved