news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி
tv

Also Watch

tv

Read this

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி

ஜானிக் சின்னர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜானிக் சின்னர் வெற்றி

ஜெர்மனி வீரரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் ஜெர்மனியின் ஜேன் லென்னார்டு ஸ்டிரப் உடன் மோதிய அவர், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி அதிரடியான சர்வீஸ்கள் மூலம் புள்ளிகளை சேர்த்தார்.

இறுதியில், 7-க்கு 5, 7-க்கு 6, 6-க்கு 3 என்கிற செட் கணக்கில் ஜேன் லென்னார்டு ஸ்டிரப்பை வென்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இவர், தொடர்ந்து 2-வது முறையாக விம்பிள்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி: அரையிறுதிக்கு தகுதி :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதி சுற்றில் சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதிய அவர், முதல் செட்டை இழந்தார். பிறகு சுதாரித்துக் கொண்டு அடுத்த 2 செட்களைகளையும் 6-க்கு 3, 6-க்கு 3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜெசிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பெகுலா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இத்தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக் உடன் மோதினார். முதல் செட்டை இவா ஜோவிக் கைப்பற்றினாலும்,அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றி ஜெசிகா வெற்றி பெற்றார்.

Related Link
கிறிஸ்டியானோ ரொனால்டோ  பற்றி முகமது சிராஜ் உருக்கம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி முகமது சிராஜ் உருக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கீர்த்தனா ஆய்வு சர்ச்சை - ராஜ்மோகன் விளக்கம்

12
25 mins agoshare
கீர்த்தனா ஆய்வு சர்ச்சை - ராஜ்மோகன் விளக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau