Also Watch
Read this
By: Manigandan Raja

குறிப்பிட்ட காலத்தில் மீண்டு வர முடியாது.
காயமடைந்த வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டு வர அவர்கள் ஒன்றும் இயந்திரம் கிடையாது என முன்னாள் வீரர் லட்சுமன் கருத்து தெரிவித்தார். இலங்கை தொடரில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் பலர் வெளியேறியது விவாதத்திற்குள்ளானது.
வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வர மட்டுமல்ல களத்தில் சிறப்பாக விளையாடவும் உயர்திறன் மையத்தின் மூலம் வழங்கப்படும் பிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்றார்.
இலங்கை டெஸ்ட் தொடர் - முக்கிய வீரர்கள் விலகல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக சில முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி சுப்மன் கில்லை கேப்டனாக கொண்ட அணியில், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால்,பந்த், ஜூரல், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகம்மது சிராஜ், படிக்கல், சர்பாரஸ் கான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி இலங்கையின் கல்லே மைதானத்திலும், இரண்டாவது போட்டி 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.
2027 ஒருநாள் உலகக் கோப்பை-ரோகித் நிச்சயம் இடம் பெறுவார்
2026ஆம் ஆண்டில் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் நிச்சயம் இடம் பெறுவார் என முன்னாள் வீரர் அஜிங்கயா ரஹானே கருத்து தெரிவித்தார்.

ஒரு தொடரை வைத்து ரோகித் போன்ற வீரர்களின் திறனை மதிப்பிட முடியாது என்றும், அவரின் அனுபவம் அணிக்கு முக்கியம் என்பதால் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved