Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
ஸ்கல் இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் சார்பில், சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான மாநாடு இன்று நடைபெறுகின்றது எனவும், சுற்றுலா துறையில் தமிழகம் இந்திய அளவில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
கோவை மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத கோவை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை இரண்டாவது
இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கோவை மாவட்டம் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு பரிச்சயமானது, சுற்றுலாத்துறைக்கு உண்டான அனைத்து பணிகளையும் அவர் மேற்கொள்வதாகசொல்லி இருக்கிறார் என தெரிவித்தார்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது, இன்னும் 10 சதவீதம் மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என தெரிவித்த அவர்,நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் ஒரு மாதத்தில் நான்கு கொலைகள் நடைபெற்று உள்ளது குறித்த கேள்விக்கு, போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது எனவும், காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார் இளைஞர்கள், மாணவர்கள் இல்லாத வீடு இல்லை பெற்றோர்களும் குழந்தைகளை பொறுப்புடன்
பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், போதை பொருளை நடமாட்டத்தை தடுக்க கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வார வாரம் கோவைக்கு வரும் பொழுது எல்லாம் அதிகாரிகள் அனைவரிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்துஐ ஆலோசித்து வருகின்றோம் எனவும்,காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது முறையான விசாரணைக்கு பிறகு வெளிப்படையாக பேச முடியும், காவல்துறை தனது கடமையை பொறுப்பாக செய்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.
கோவை மாணவர் கொலை குறித்த கேள்விக்கு, திங்கட்கிழமை அதற்கு உண்டான பதில்களை சொல்வதற்கு சபாநாயகர் சொல்லியிருக்கிறார் எனவும் பதில் அளித்தார்.
கோவை மெட்ரோ திட்டம் இரண்டு முறை ரத்தாகி இருப்பது குறித்த கேள்விக்கு, கடந்த முறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது எனவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் திட்டத்தை முறையாக புதிய DPR தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார். கோவைக்கு மெட்ரோ அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
கோவை கிரிக்கெட் மைதானம் குறித்து விரிவான அறிக்கை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது எனவும், உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க பல்வேறு விஷயங்களை பார்க்க
வேண்டியிருக்கிறது, அதை பார்த்துவிட்டு இடம் சரியாக இருந்தால் அதை செயல்படுத்துவோம் , இல்லையெனில் வேறு பகுதிகள் சொல்லி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
மெட்ரோவிற்கான டிபிஆர் எவ்வளவு நாளில் மீண்டும் தயாரிக்கப்படும் என்பதை அடுத்த மீட்டிங்கில் சொல்லி விடுகின்றோம் என தெரிவித்த அவர், DPR தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளாக பிரித்து, ரசிகர் மன்ற பணிகளை விஜய் பாணியில் நடிகர் தனுஷ் செய்வது குறித்த கேள்விக்கு, இது ஜனநாயக நாடு, மக்களை சந்தித்து ஆட்சி அமைக்க கேட்கக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் இருக்கிறது , அவர் அவர்கள் பணியில் செய்கிறார்கள், யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் எனவும், ஜனநாயக நாட்டில் அனைவரும் செய்யலாம் எனவும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved