Also Watch
Read this
By: Web Team

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் ஆயிரத்து 259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக, எக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்துள்ளது. பணம் செலுத்தினால் 'நீல நிற டிக்' கிடைக்கும் என, பயனர்களை ஏமாற்றியதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விளம்பர தரவுகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved