Also Watch
Read this
By: Manigandan Raja

விலையுயர்வு, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 600 டன்னாக சரியும் என தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு தொடங்கி நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வால் சாமானியர்களால் தங்கத்தை வாங்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக தங்கம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 11 சதவீதமாக சரிந்து 710.9 டன்னாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி 802.8 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.