Also Watch
Read this
By: Web Team

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தந்தை, மகன் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தலமான பாண்டை கடற்கரையில் யூதர்களின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா எனப்படும் ஒளியை கொண்டாடும் விழாவை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்தனர். அப்போது இருவர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில் துப்பாக்கிசூடு நடத்தியது சஜித் அக்ரம் மற்றும் அவருடைய மகன் நவீத் அக்ரம் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் சுட்டதில் தந்தை உயிரிழந்த நிலையில் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved