ஆசிரியை ஒருவரும் உயிரிழப்பு - 40 க்கும் மேற்பட்டோர் காயம்
- பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 குழந்தைகள் மற்றும் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலம் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
- பள்ளி கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை

- ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ((Leonardo DiCaprio)) வழங்கிய நிதி காரணமாக, நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை 198-லிருந்து 355-ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டு லியோனார்டோ, நேபாள புலிகள் பாதுகாப்பு திட்டத்திற்காக 3 மில்லியன் டாலர்களை வழங்கினார்.
- இந்த நிதியுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 9 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவில் உள்ள டெனியன்ஸ்கி, கொலொசிஸ்கை மாவட்டங்கள், கார்கிவ் மாகாணங்களில் உள்ள தகவல் தொலைதொடர்பு நிறுவனங்கள், மின் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலால் உக்ரைனில் உள்ள நகரங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.