ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து பெறப்பட்ட பாகங்களை கொண்டு அதிநவீன நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த துல்லியமாக இலக்கைத் தாக்கும் ‘கைபர் ஷெக்கான்’ என்ற ஏவுகணையை சீன பாகங்களை பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவில் அரசியல் பிரமுகரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசில் சரணடைந்தார்.
சவுதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து
சௌதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கல்முனையை சேர்ந்த அனோஜன் சிவராசா, வேலைக்காக செளதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில், முகநூலில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பதிவிட்டதாகக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்டது.