காணாமல் போன இந்திய மாணவர் : அமெரிக்காவில்,காணாமல் போன 22 வயது இந்திய மாணவரை கண்டுபிடித்து தருமாறு அவரது அறைத்தோழர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெர்க்லியில் ((Berkeley ))உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை ((Saketh Sreenivasaiah)) கடந்த 9 ம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. கடைசியாக அவர் அன்சா ஏரி அருகே காணப்பட்டதாக அறைத்தோழர் பனீத் சிங் ((Baneet Singh,)) கூறியுள்ள நிலையில், மாணவரை கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. Related Link "இந்தியா பாகிஸ்தான் விளையாடுவதில் மகிழ்ச்சி"