Also Watch
Read this
By: Manigandan Raja

தேன், திண்பண்டங்களை சுவைத்த வீடியோ
கலிபோர்னியாவின் மாமத் லேக்ஸ் நூலகத்திற்குள் (Mammoth Lakes) நுழைந்த கருங்கரடி, அங்கிருந்த தேன் மற்றும் திண்பண்டங்களை சாப்பிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 'வின்னி-தி-பூ' (Winnie-the-Pooh) புத்தகத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளில் , நூலகம் திறப்பதற்கு முன்பே கரடி உள்ளே நுழைந்துள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட நார்டே காட்டுத் தீ

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட நார்டே (Norte Fire) காட்டுத்தீ வீடுகளை சூழ்ந்து கடலோர குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் வீசும் சாண்டா அனா (Santa Ana winds) காற்று மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதம் காரணமாக காட்டுத்தீ அதிகவேகமாக பரவுகிறது. ஆரஞ்சு கவுண்டியில் உள்ள சான் கிளெமென்டே (San Clemente) மற்றும் சான் ஜுவான் கபிஸ்ட்ரானோ (San Juan Capistrano) ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
முகம்மது என்ற பெயரை கேலி செய்து பேசிய அதிபர் டிரம்ப்

இஸ்லாமியர்களின் மிக முக்கியப் பெயரான முகம்மது என்ற பெயரைக் டிரம்ப் கேலி செய்ததற்கு மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் உரிமைக் கூட்டமைப்புகளும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
ஜார்ஜியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், உலகிலேயே அதிபராக இருக்க யாரும் விரும்பாத ஒரே நாடு ஈரான்தான் என்றும் அங்கிருக்கும் முகம்மது என்ற பெயருடைய பலரிடம் அதிபர் பதவி வேண்டுமா என்று கேட்பது போல மேடையில் பாவனை செய்து காட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved