Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுடனான மோதல் போர் அல்ல; இராணுவ மோதல்
ஈரானுடனான மோதல் அமெரிக்காவுக்கு “சிறிய விஷயம்” என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இதனை போர் என்று அழைக்க மாட்டேன் என கூறியிருந்த நிலையில், டிரம்பும் “ராணுவ மோதல்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இது பெரிய விஷயமல்ல என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு 5 பில்லியன் டாலர் குண்டுகள் விற்பனை
ஈரானுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 47 ஆயிரத்து 216 கோடிக்கு குண்டுகள் மற்றும் வழிகாட்டி கருவிகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்கா- சவுதி பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்த ஒப்புதல் மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல்
ஈரான் போரில் களமிறக்கப்பட்ட அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல், 286 நாட்கள் கடலில் இருந்த நிலையில், துறைமுகம் திரும்பியுள்ளது.

நீண்டகால கடற்பயணத்தால் கப்பலின் நீர்மட்டப் பகுதியில் துருப்பிடிப்பு அதிகமாக காணப்படுவதாகவும், கப்பலை முழுமையாக பராமரிக்க சுமார் 30 நாட்கள் தேவைப்படலாம் எனவும் கடற்படை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved