news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வெகுவாக குறையும் அமெரிக்காவின் ஆயுத இருப்பு
tv

Also Watch

வெகுவாக குறையும் அமெரிக்காவின் ஆயுத இருப்பு

வான் பாதுகாப்பு அமைப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

பாதுகாப்பு அமைச்சரிடம் கடிந்து கொண்ட அதிபர் டிரம்ப் 

அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஆயுத கையிருப்பு எதிர்பார்த்த அளவை விட குறைந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை பாதிக்கும் அளவுக்கு ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கேம்ப் டேவிட் கூட்டத்தின் போது, இந்த நிலை குறித்து ஏன் முன்பே தெரிவிக்கப்படவில்லை என டிரம்ப் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு 

பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு ஊடகங்களில் பணியாற்றும் பாகிஸ்தான் செய்தியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி நகரங்களுக்கு வெளியே சென்று செய்தி சேகரிக்க அரசின் அனுமதி பெற வேண்டும்.

மேலும், அவர்கள் அரசிடம் பதிவு செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கான காரணத்தை அரசு இதுவரை வெளியிடவில்லை. நாட்டில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளின் பின்னணியில் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

ஏமனின் மத்திய பகுதியில் உள்ள மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் அமைந்துள்ள அரசு ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 30 அரசு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்த சுகாதாரத்துறை அமைச்சர் காசிம் பஹிபா, நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

Related Link
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்தியனுப்பிய ஈரான்

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்தியனுப்பிய ஈரான்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved