Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் முன்வைத்த புதிய திட்டத்தை நிராகரித்து அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்கு திறக்க ஈரான் முன்வைத்த புதிய திட்டத்தை நிராகரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்க கடற்படை முற்றுகையால் ஈரானுக்கு வருவாய் குறைந்துள்ளதால், அந்நாடு தற்போது ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகக் கூறினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கனமழையால் வெள்ளம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 48 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாங்காக்கின் சில பகுதிகள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வருவதுடன், தங்களது வாகனங்களை உயரமான பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.
போதேகோஷி வெள்ளம் உலகிற்கான எச்சரிக்கை
ஐநா பொதுச்சபையில் பேசிய நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, போதேகோஷி வெள்ளம் உலகிற்கான எச்சரிக்கை என தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறிய அவர், காலநிலை நீதியை நடைமுறைப்படுத்தவும், பேரிடர் பாதித்த நாடுகளுக்கு எளிதாக நிதி கிடைக்கவும் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved