Also Watch
Read this
By: Web Team

சிரியாவின் ஹோம்ஸில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 21 பேர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் அதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த கோழைத்தனமான குற்றச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved