Also Watch
Read this
By: Manigandan Raja

கப்பலில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்
ஹார்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்தனர். அமெரிக்கா - ஈரான் இடையே போர் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், ஹார்மூஸ் நீரிணையின் ஹெங்காம் தீவுக்கு அருகே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஹார்மூஸின் மிகப்பெரிய தீவான கெஷ்ம் அருகே சென்ற ஈரான் கப்பலை குறி வைத்து தாக்குதல் நடைபெற்று உள்ளது.
வாடகைதாரரிடம் தகராறு செய்து கைதான இந்திய வம்சாவளி பெண்
கனடாவில் தனது வீட்டில் குடியிருந்தவர்கள் மாட்டிறைச்சி சமைத்ததற்காக தகராறில் ஈடுபட்டு கைதான இந்திய வம்சாவளி பெண், தான் உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பல மாதங்களாக வாடகை கொடுக்காமல் இருந்து வந்தவர்கள், தன்னை துன்புறுத்தி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும், அந்த பிரச்சனையை மடைமாற்றி தன்னை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved