கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி 500-க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் வருத்தம் தெரிவித்தார். வரும் காலங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் இஸ்ரேலுக்கு ஆண்டனியோ குட்டெரஸ் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார். Related Link மியான்மரில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு