news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியா மீது 100% வரி விதிக்க அனுமதிக்கும் மசோதா
tv

Also Watch

இந்தியா மீது 100% வரி விதிக்க அனுமதிக்கும் மசோதா

ரஷ்ய எரிவாயு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கினார் ட்ரம்ப்

ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெயை வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு சட்டமாக்கினார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருநாட்டு உறவுகளை பாதித்து, உலக எரிசக்தி சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் போருக்கான அமெரிக்காவின் மொத்த செலவு

ஈரான் போருக்கான அமெரிக்காவின் மொத்த செலவு 4 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் மதிப்பிட்டுள்ளது. இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் 2.69 லட்சம் கோடி எனவும், தற்போது ஒரு மாதத்திற்குச் சராசரியாக 28,780 கோடி செலவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஒரு அணு ஆயுத வல்லரசு நாடு

வடகொரியா ஒரு அணு ஆயுத வல்லரசு நாடு என்றும், இனி இதை யார் நினைத்தாலும் ஒருபோதும் மாற்ற முடியாது என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தங்களின் அணு ஆயுதத் திட்டத்தை எதிர்த்து ஐநா அணுசக்தி முகமை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரிய அரசு, அமெரிக்கா, தென்கொரியாவின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாத ஐநா, வடகொரியா மீது மட்டும் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றச்சாட்டியுள்ளது.

Related Link
ஐநா கூட்டத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் உரை

ஐநா கூட்டத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் உரை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த வாரம் சீனா செல்லும் அமெரிக்க அதிபர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved