news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க சுற்றுப் பயணம் செல்லும் சீன அதிபர் ஜின்பிங்
tv

Also Watch

அமெரிக்க சுற்றுப் பயணம் செல்லும் சீன அதிபர் ஜின்பிங்

பேச்சுவார்த்தை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சீன அதிபர் ஜின்பிங்

அதிபர் டிரம்புடன் இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை 

மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி அமெரிக்கா செல்லும் ஜின்பிங், 24ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 25ஆம் தேதி இரவும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜின்பிங் நாடு திரும்புகிறார்.

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணம்?

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் வருகை இருதரப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என முன்னாள் மூத்த தூதர் வித்யா பூஷன் சோனி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா-வங்கதேசம் இடையே நீண்டகாலமாக இருக்கும் தீஸ்தா நதிநீர் பிரச்னை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் எபோலோ வைரஸ் தொற்று

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலோ வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், வைரஸ் தாக்குதலால் மட்டும் இதுவரை 2 ஆயிரத்து 325 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 4 ஆயிரத்து 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது. எபோலோ வைரஸ் தொற்று காங்கோவை தாண்டி அண்டைநாடான உகாண்டா வரையிலும் பரவியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Link
ஈரான் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரான் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved