Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க ராணுவ வீரரைக் கொல்பவருக்கு ரூ.28 லட்சம் வெகுமதி
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொல்பவருக்கோ அல்லது பிடிப்பவருக்கோ 28 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஒருவேளை இந்தச் செயலை ஈரானியப் பெண் ஒருவர் செய்தால், அந்த வெகுமதி இருமடங்காக அதாவது 56 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி தெரிவித்தார்.
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக, கீவில் உள்ள இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான லஷ்மி மிட்டலுக்கு சொந்தமான எஃகு தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஃகு ஆலையாகக் கருதப்படும் இந்த ஆலையில், முக்கிய மின்சாரம் மற்றும் உலை அமைப்புகள் சேதமடைந்தன.

இதன் விளைவாக, உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.14 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved