Also Watch
Read this
By: Manigandan Raja

சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு
ஹோர்முஸ் நீரிணை தடையால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்ந்தாலும், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாக இருக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
எண்ணெய் வாங்காததால் போர் முடிவுக்கு வராது
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாலோ, வாங்காததாலோ போர் முடிவுக்கு வராது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா என உக்ரைன் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சமரசம் மூலமே இந்த மோதலுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஜெய்சங்கர் பேச்சு
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து கீவ் நகரில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இது போருக்கான காலம் அல்ல என்றும், போர்க்களத்தில் தீர்வுகள் கிடைக்காது என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரே இதற்கான தீர்வைக் காண வேண்டும் என்பது இயல்பானதே என தெரிவித்த அவர், இருப்பினும், ஏதேனும் ஒரு வகையில் இந்தியா உதவ முடியுமென்றால், தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved