news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும்
tv

Also Watch

கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும்

அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப் பதிவு

ட்ரூத் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு

ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு கேலன் 3 டாலராவும், இறுதியில் 2 டாலருக்கும் கீழே சென்றுவிடும் எனவும், இவை அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது எனவும், அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் சிறைப்பிடித்ததாக ஈரான் புரட்சிகர காவல்படை தகவல்

ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை சிறைப்பிடித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இது, உளவு பார்த்தல், கடல் தரை வரைபடம் தயாரித்தல் மற்றும் கம்பிவடங்களை ஆய்வு செய்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலாகும்.

இந்த கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியில் மாற்று வழித்தடத்தை கண்டறியும், கடலில் ஈரானால் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை கண்டறிந்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வந்தது.

காசாவின் மேற்கு கரையில் இஸ்ரேலியர்கள் குடியேற்றம்

மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்ற பொருட்களுக்கு பிரிட்டன் தடை விதித்ததால், ஜெருசலேமில் உள்ள பிரிட்டிஷ் துணை தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காசாவிற்கான சர்வதேச முத்தரப்பு ஒருங்கிணைப்பு பணிகளில் இருந்து பிரிட்டிஷ் பிரதிநிதிகள் நீக்கப்படுவதாகவும், மேற்கு கரையில் பாலஸ்தீன பாதுகாப்பு படையினருக்கு பிரிட்டன் வழங்கி வந்த பயிற்சிகள் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதோடு, ஜெரமி கார்பின் உள்ளிட்ட பிரிட்டனின் முக்கிய எம்பிக்கள், அதிகாரிகள் 12 பேர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவியை சீரழித்த 3 இளைஞர்கள், ஒருவருக்கு தூக்கு தண்டனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved