Also Watch
Read this
By: Web Team

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் வீட்டில் FBI புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜான் போல்டன் இல்லத்தில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒரு பகுத்தறிவற்றவர் என ஜான் போல்டன் விமர்சனம் செய்ததுடன், இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட அதிபர் டிரம்ப்பை கண்டித்தார்.
இதன் எதிரொலியாகத்தான் அவரது வீட்டில் சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved