Also Watch
Read this
By: Manigandan Raja

பிரபல அமெரிக்கப் பெண்ணுரிமை போராளி
பிரபல அமெரிக்கப் பெண்ணுரிமை போராளியும், எழுத்தாளருமான Gloria Steinem தனது 92 ஆவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார்.1960, 70களில் அமெரிக்காவில் 2ம் கட்ட பெண்ணுரிமை இயக்கத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்த Gloria Steinem, 50களில் இந்தியாவில் 2 ஆண்டுகள் தங்கி கிராமப்புறப் பெண்களின் அமைதிப் போராட்டங்களுக்கு உதவினார். 2013ல் அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தென் துருவப் பகுதியில் கண்டுபிடிப்பு
சனிக் கோளின் தென் துருவப் பகுதியைச் சுற்றி 10 அலைகளை கொண்ட புதிய DECAGON வடிவ வளிமண்டல அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாயுக்களால் ஆன சனிக் கோளில் உருவாகி வரும் இந்த மாபெரும் அமைப்பு, முற்றிலும் புதிய வகை விண்வெளி நிகழ்வாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
சனியின் வட துருவத்தில் 6 அலைகளை கொண்ட வளிமண்டல அமைப்பு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் பெருமளவில் வெடிமருந்துகள் உள்ளன
அமெரிக்காவிடம் தங்கு தடையின்றிப் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பெருமளவில் அதிநவீன ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கையிருப்பில் உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் உயர்ந்து உள்ளதாக தெரிவித்த டிரம்ப், ஈரானுடனான போர்ச் சூழலில் அமெரிக்க ராணுவத்தின் வெடிமருந்து கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான தகவல்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved