மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டு
அமெரிக்க தொழிலாளர்களுக்குப் பதிலாகக் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்-1பி விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் H-1B விசா மூலம் பணிபுரிபவர்கள், அதே பதவியில் உள்ள அமெரிக்கர்களை விட 20,000 டாலரும், வெளிநாட்டு அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிவோர் 48,000 டாலரும் குறைவான ஊதியம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சிறந்த சூழலை உருவாக்க கோரி போராடும் மாணவர்கள்
பிரான்ஸ்நாட்டில் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி விரட்டி அடித்தனர்.
அதில் மாணவர்கள் சிலர் படுகாயமடைந்ததால், காவல்துறை மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.