Also Watch
Read this
By: Manigandan Raja

பைடன் கடுமையான உடல் வலியால் அவதிப்படுவதாக தகவல்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் அவதிபட்டு வருவதாக அவரது மகன் ஹண்டர் தெரிவித்துள்ளார். 83 வயதான ஜோ பைடனுக்கு கடந்த 2025 - ல் தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதற்காக அவர் சிகிச்சை பெற்று வரும் போதிலும், புற்றுநோய் செல்கள் அவரது எலும்புகளுக்குள் பரவி உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளதாக கூறிய அவரது மகன், அதனால் கடுமையான வலியால் அவதிப்படுவதாகவும் அவரது தற்போதைய நிலையை நேரில் பார்ப்பது குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பது அவரது அசைக்க முடியாத மன உறுதியைக் காட்டுவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்றால் ஹோர்முஸ் திறக்கப்படும்
நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாக புதிய கப்பல் போக்குவரத்து பாதைக்கான வரைவு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், அமெரிக்கா தனது நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளும் வரை நீரிணை திறக்கப்படாது என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.

நாட்டில் ஒற்றுமை, வலிமை மற்றும் ஒருமைப்பாடு மிக வலுவாக இருக்கும் இந்த நேரமே ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகச் சிறந்த தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஈரானிய மக்களின் இறையாண்மை மற்றும் உரிமைகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்பதையும் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved