news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வனப்பகுதியில் விழுந்து சிதறிய சுற்றுலா ஹெலிகாப்டர்
tv

Also Watch

வனப்பகுதியில் விழுந்து சிதறிய சுற்றுலா ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் விபத்து

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Helicopter

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், பைலட் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியாவை சேர்ந்த குடும்பத்தினர், 15 வயது சிறுமியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பிரேசில் சென்ற நிலையில், Tijuca தேசிய பூங்காவை ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். Vista Chinesa எனும் புகழ்பெற்ற காட்சி முனை அருகே பறந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து சிதறி விபத்துக்குள்ளானது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த முயன்ற ஹெலிகாப்டர் விபத்து 

அமெரிக்காவின் யூட்டாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், தீ கொளுந்து விட்டு எரிந்ததால் மீட்புக்குழுவினர் விபத்து நிகழ்ந்த பகுதியை அடைவது பெரும் சவாலாக மாறியது.

Utah நகரில் உள்ள தேசிய வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 7 ஹெலிகாப்டர்களில் ஒன்று, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இருவரின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியைச் சுற்றி காட்டுத்தீ எரிந்து வருவதால் மீட்புக்குழுவினர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொசோவோ இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு 

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ ((Kosovo)) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.பி ஒருவர், இடைக்கால பிரதமர் Albin Kurti மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொசோவோவில் கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசிய இடைக்கால பிரதமர், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கு முன்னதாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி எம்.பி முட்டைகளை வீசினார். மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Related Link
அமெரிக்காவை விட இந்தியர்களை அதிகம் வெளியேற்றும் கனடா

அமெரிக்காவை விட இந்தியர்களை அதிகம் வெளியேற்றும் கனடா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்திற்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved