news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

தன் பந்து வீச்சுக்கு சவாலாக இருந்தவர் ரோகித் சர்மா

பேட் கம்மின்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேச்சு 

ஐசிசி ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மாதான், தன் பந்து வீச்சுக்கு சவாலாக இருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

பந்தை ரோகித் சர்மா எளிதாக அடித்து ஆடுவார் என்றும், களத்தில் நீண்ட நேரம் நின்று விட்டால் பந்தை அனைத்து திசைகளிலும் பறக்க விடுவார் எனவும் அவர் பேசினார். இதன் காரணமாகவே அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்வதாக கம்மின்ஸ் கூறினார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நேரடி தகுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி

இரண்டு முறை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இனி வரும் நாட்களில் பிற அணிகளுடனான தகுதி சுற்றுப் போட்டிகளில் வென்றால் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2019 மற்றும் 2023 உலகக் கோப்பை தொடரின்போது நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை அந்த அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்சன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷேக் ரஷீத் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இலங்கையின் கல்லே மைதானத்தில் வரும் 15ஆம் தேதியும், 2ஆவது போட்டி வரும் 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Related Link
இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர், இலவச அனுமதி

இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர், இலவச அனுமதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒன்றிணைகிறதா தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved