Also Watch
Read this
By: Manigandan Raja

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி உடல் நலக்குறைவு காரணமாக 68ஆவது வயதில் காலமானார். அர்ஜெண்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி
10ஆவது டி.என்.பி.எல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் ((MADURAI PANTHERS)) அணி கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை குவித்தது.

கேப்டன் சித்தார்த் 87 ரன்களும், பாலசுப்ரமணியன் 84 ரன்களும் எடுத்தனர். 240 இலக்குடன் களமிறங்கிய மதுரை 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. சாரங்கராஜன் 47 பந்துகளில் 121 ரன்களை குவித்து மதுரை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved